← All events
*புரட்டாசி மாத சிறப்பு திருமஞ்சன நீராட்டு சேவை* - 17-10-2026 காலை 6.00 மணி 6 am

*புரட்டாசி மாத சிறப்பு திருமஞ்சன நீராட்டு சேவை* - 17-10-2026 காலை 6.00 மணி 6 am

Date 17 Oct 2026
Time 6.00 am
Place அருள்மிகு சென்ன கேசவப் பெருமாள் கோவிலில் கும்மிடிப்பூண்டியில்🔥🙏🪷🕉️
Contact Sugavanam Natarajan
Phone 9176244989
WhatsApp +918825518608
*புரட்டாசி மாத சிறப்பு திருமஞ்சன நீராட்டு சேவை* - 17-10-2026 காலை 6.00 மணி 6 am

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ🔥🙏🪷🕉️

அன்பார்ந்த பக்தர்களின் கனிவான கவனத்திற்கு,

பேசும் பெருமாள் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயில் புது கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் மாவட்டம்.

அருள்மிகு ஸ்ரீ கனகவல்லி சமேத ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் சன்னதி ஸ்தல வரலாறு வடக்கு திசையில் அமைந்துள்ள குபேர சென்ன கேசவப் பெருமாள் உடன் தாயார் ஸ்ரீதேவி நாச்சியார், ஸ்ரீ பூதேவி நாச்சியார், கிழக்கு திசையில் நின்ற கோலத்தில் எழுந்தருளிய பெருமாளின் ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் அமர்ந்த திருக்கோலம்

ஸ்ரீ கனகவல்லி தாயார் தனி சன்னதியில் இருந்தும் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறாள்.


ஆழ்வார்களால் மங்களாசானம் செய்யப்பட்ட குபேரன் ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள், ஸ்ரீ கனகவல்லி தாயார் உடனுறை எம் பெருமான்கள் திருவடிகளுக்கு சமர்ப்பணம்.

*இக்கோயில் தொண்டை நாட்டுக்குரிய அமைப்புடன் சுமார் 1300 வருடத்திற்கு உரிய ஸ்தலம்*

நிகழும் 2026 ம் வருடத்தின் புரட்டாசி மாத சிறப்பு திருமஞ்சன நீராட்டு சேவை நிகழ்வானது நமது புது கும்மிடிப்பூண்டியில் உள்ள வல் தொன்மை மிகு அருள்மிகு சென்ன கேசவப் பெருமாள் கோவிலில் வரும் 17-10-2026 தினம் காலை சுமார் 6.00 மணி அளவில் நடை பெற உள்ளதாலும், அன்று மாலை பெருமாள் அலங்காரம் செய்து நிகழ்வு நடைபெற உள்ளதாலும், சில ஆண்டுகளாக கட்டிட செப்பனிடும் திருப்பணி வேலைகள் நடைபெற்று வரும் இந்த சென்ன கேசவப் பெருமாள் கோவிலில் நடைபெறும் வைணவ மரபுபடியான இவ் வருட 2026 புரட்டாசி மாதம் 17-10-2026 சிறப்பு தின நிகழ்வுகளில், தாங்களும், தங்கள் நேரில் வருகை புரிந்து, நிகழ்வில் பங்கேற்று தங்கள் உடல்ச உழைப்பு உதவிகள் மற்றும் நிதி காணிக்கை மற்றும் பொருட் காணிக்கை போன்றவற்றில் தங்களால் இயன்றவற்றை மேற்படி ஆலய நிர்வாக பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் அருள்மிகு சென்ன கேசவப் பெருமாளின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்று சென்று, தங்களின் இக் கலியுக வாழ்வில் நோயற்ற வாழ்வுடனும், குறைவற்ற செல்வத்துடனும், வசிக்கும் பாக்கியத்தை பெற்று செல்ல முன்னுரிமை அளித்து வருகை புரியுமாறு மேற்படி ஆலய நிர்வாகிகள் சார்பில் கனிவுடன் விண்ணப்பம் செய்கிறோம். இப்பதிவை 17-10-2026 தின சென்ன கேசவப் பெருமாள் கோவிலின் இவ் வருட புரட்டாசி மாத சிறப்பு திருவிழா நிகழ்வுக்கான அழைப்பிதழாக ஏற்று கொள்ளுமாறும் விண்ணப்பம் செய்கிறோம்.

புது கும்மிடிப்பூண்டி அருள்மிகு சென்ன கேசவப் பெருமாள் கோவில் நிர்வாக பொறுப்பாளர்கள்.🙏.
திருக்கோவிலுக்கு தேவையான பொருட்கள்

அபிஷேக சாமான்கள் அன்னதான தேவையான ம் சாமான்கள்
மாலைகள் பூ வகைகள்
மேளம் நாதஸ்வரம்
மின்சார சாதனை

G.Pay U.Pay
98847 55708

ஸ்ரீமதே ராமானுஜாய நம
பேசும் பெருமாள் என்று அழைக்கப்படும்
அருள்மிகு ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் திருக்கோவில்
புது கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.
Cell : 9884155708, 9841655708, 9884755708
(இடதுபுறம்: மகிழ்திருமேனி | வலதுபுறம்: புகழ்திருமேனி)
அருள்மிகு ஸ்ரீ கனகவல்லி சமேத ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் சன்னதி ஸ்தல வரலாறு
வடக்கு திசையில் அமைந்த குபேர சென்ன கேசவப் பெருமாள் உடன் தாயார் ஸ்ரீ தேவி நாச்சியார், ஸ்ரீ பூதேவி நாச்சியார், கிழக்கு திசையில் சயனக் கோலத்தில் எழுந்தருளிய பெருமாள், ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் அமர்ந்த திருக்கோலம், ஸ்ரீ கனகவல்லி தாயார் தனி சன்னதியில் இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
> ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட குபேரன் ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள், ஸ்ரீ கனகவல்லி தாயார் உடனுறை எம் பெருமான்கள் திருவடிகளுக்கு சமர்ப்பணம்.
>
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அருள்மிகு ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள், ஸ்ரீ கனகவல்லி தாயார், ஸ்ரீ திருக்கச்சி நம்பிகளுடன் எழுந்தருளி உலகங்களை படைத்து காக்கின்ற எம்பெருமான் ஐந்து நிலைகளில் எழுந்தருளியுள்ளார். அதாவது பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம், ப்ரத்யுமணன் வடக்கு திசை திருமுகம், திருநாமம் சென்ன கேசவப் பெருமாள் உடன் தாயார் ஸ்ரீ தேவி நாச்சியார், ஸ்ரீ பூதேவி நாச்சியார், ஸ்ரீ கனகவல்லி தாயார் மூன்றாவது விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம் ஆகியனவாகும். இந்த எம்பெருமான் அர்ச்சாவதாரம் நிலையில் எழுந்தருளியுள்ளார்.
இக்கோயில் தொண்டை நாட்டுக்குரிய அமைப்புடன் சுமார் 1300 வருடத்திற்குரிய ஸ்தலம். எம்பெருமான் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ தேவி நாச்சியார், ஸ்ரீ பூதேவி நாச்சியாருடன், ஸ்ரீ கனகவல்லி தாயார் உடனுறை காட்சி தருவது மிகவும் சிறப்பு அம்சம், வடக்கு திசையில் தோன்றிய சென்ன கேசவப் பெருமாள் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய அம்சம், இவரை வழிபட கல்வி கேள்வி ஞானம், சந்தான பாக்கியம், திருமண பாக்கியம், தீராத இன்னல்கள் தீரும், தீராத நோய்களையும், தீர்க்க கூடிய ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் சரியாக வாய்பேச முடியாதவர்களும் இங்கு வந்து பயன் பெற்றுள்ளார்கள்.
ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் ஸ்தல வரலாறு எம்பெருமான்கள் ப்ரத்யக்ஷயமாய் இவருக்கு இவருடைய அவதார ஸ்தலத்திலே சேவை சாதித்து இங்கேயே எழுந்தருளினார் என்ற சுவாமி மணவாள மாமுனிகளால் மங்களாசாஸனம் செய்யப் பெற்றவராய் எம்பெருமான் தரிசனம். பொய்கையாழ்வார்-திருவோண நட்சத்திரம், பூதத்தாழ்வார்-அவிட்டம் நட்சத்திரம், பேயாழ்வார்-சதயம் நட்சத்திரம், திருமழிசையாழ்வார்-மகம் நட்சத்திரம், நம்மாழ்வார்-விசாகம் நட்சத்திரம், மதுரகவியாழ்வார்-சித்திரை நட்சத்திரம், குலசேகராழ்வார்-புனர்பூசம் நட்சத்திரம், பெரியாழ்வார்-சுவாதி நட்சத்திரம், தொண்டரடிப்பொடியாழ்வார்-கேட்டை நட்சத்திரம், திருப்பாணாழ்வார்-ரோகிணி நட்சத்திரம், திருமங்கையாழ்வார்-கிருத்திகை நட்சத்திரம், ஆண்டாள்-பூசம் நட்சத்திரம் மற்றும் ஸ்ரீகனகவல்லி தாயார், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது.
அதிசயமான ஸ்ரீ திருக்கச்சிநம்பி ஆச்சாரியார், ஆண்டாள் எம்பெருமான் திருவடிகளே சரணம், ஸ்ரீமதே ராமானுஜர் சன்னதி இருப்பது போல் கருட மண்டபம், ஆர்த்தி மண்டபம், மஹாமண்டபம் போல அமைந்துள்ளது. கோயிலின் வழிபாடு திருவோணம் நட்சத்திரத்தன்று சென்ன கேசவப் பெருமாளுக்கு மகா திருமஞ்சனம் மிக சிறந்த முறையில் நடைபெறும். பௌர்ணமி அன்று ஸ்ரீ கனகவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திருத்தலத்தில் சிறப்புமிக்க இரண்டு கோலம் புகழ்திருமேனியிலும் (நின்றகோலம்), மகிழ்திருமேனியிலும் (சயன கோலம்) எழுந்தருளியிருப்பது காண கிடைக்காத சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் புனரமைப்பு செய்ய ஏதுவாக 21.10.2024 அன்று பாலாலயம் செய்யப்பட்டது. 11.02.2025 தைப்பூசம் அன்று பூமி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்று அன்றைய தினம் வேலையும் தொடங்கப்பட்டது.
தற்போது இந்த திருக்கோவிலில் கீழ்கண்ட திருப்பணிகள் நடைபெற உள்ளது.
* கொடிமரம் புதுப்பித்தல்,
* மடப்பள்ளி கட்டுதல்,
* அலுவலக அறை கட்டுதல்,
* ஸ்டோர் ரூம் கட்டுதல்,
* ஒப்பனை அறை கட்டுதல்,
* மூலஸ்தானம் பழுது பார்த்தல்,
* அர்த்தமண்டபம் பழுது பார்த்தல்,
* மகா மண்டபம் பழுது பார்த்தல்,
* அலங்கார மண்டபம் பழுது பார்த்தல்,
* வாகன மண்டபம் பழுது பார்த்தல்,
* மின்சார வேலைகள்,
* பாதுகாப்பு கேமரா பொருத்தும் வேலை,
* கோவிலுக்கு வர்ணம் அடித்தல்,
* தரையில் கருங்கல் அமைத்தல் மற்றும்
* இராஜ கோபுரம் நிர்மாணித்தல்
இத்திருக்கோயில் புனரமைப்பிற்கு தேவையான கட்டுமான பொருட்கள்:
செங்கல், மணல், சிமெண்ட், ஜல்லி, கருங்கல், கம்பி, சுண்ணாம்பு, பெயிண்ட், மின்சாதன பொருட்கள், Marbles, CCTV Camera, Carpenter மற்றும் கொடிமரத்திற்கு தேவையான மரம்
மேற்கண்ட வேலைகளுக்கு பக்தகோடிகள் தங்களால் இயன்ற பொருள் உதவியோ அல்லது பண உதவி அளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
> குறிப்பு : நன்கொடை ரூபாய். 2,00,000/- ம் அதற்கு மேற்பட்ட நன்கொடை அளிப்பவர் பெயர் கல்வெட்டுகளில் செதுக்கப்பட உள்ளது
>
ஆலயப் பணியில் கலந்துகொண்டு இறையருள் பெற்று இனிதே வாழ இது நல்ல தருணம்
நல்லதே நினைப்போம்... நல்லதே சொல்வோம்... நல்லதே செய்வோம்... நல்லதே நடக்கும்... வாழ்க இவ்வையகம் வாழ்க வளமுடன்.
வேலு செட்டியார் தொண்டு அறக்கட்டளை : 80G வரிவிலக்கு உண்டு - 9841655708
புது கும்மிடிப்பூண்டி ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய திருப்பணி குழுவினர்
| திருக்கோயில் A/c. Name: | அணுக வேண்டிய நபர் |
|---|---|
| Arulmigu Chenna Kesava Perumal Thirukoil
Bank Name : Karur Vysya Bank
Branch : Mylapore Branch
A/c. No. : 1156197000000011
IFSC Code : KVBL0001156 | திரு. வேதாமணி ராமதாஸ்
பரம்பரை அறங்காவலர்
Cell : 9884155708, 9841655708, 9884755708 |
(கீழ் அடிக்குறிப்புகள்)
* கெஜலட்சுமி வெஜிடபிள்ஸ் சப்ளையர், ஃப்ரூட்ஸ் & வெஜிடபிள்ஸ் கோயம்பேடு, சென்னை-107. Cell : 9841655708
* ஆலய பணியில் : ஐயப்பன் (எ) அரசு - வள்ளலார் பேரவை, சென்னை - 82
* எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...

Know an event near you? Suggest an event.