*16வது விநாயகர் சதுர்த்தி திருவிழா*
சித்திரை குளம், மயிலாப்பூர், சென்னை – 4.
போன் : 98844 77288
14-09-2026 திங்கள் முதல் 20-09-2026 ஞாயிறு வரை
பேரன்புடையீர்,
இந்து எழுச்சி பெருவிழாவான *மயிலாப்பூர் சித்திரை குளம் விநாயகர் சதுர்த்தி திருவிழா 2026* நிகழும் பராபவ வருடம் வரும் 14-09-2026 திங்கள்கிழமை அன்று ஸ்ரீ மகா கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு 20-09-2026 ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்களும் காலை கணபதி ஹோமம், வேத பாராயணம், லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள், ஆராதனை, அன்னதானம், மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தினமும் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 11 மணிக்கு மஹா ஆரத்தியும் 12 மணி மற்றும் மாலை 7 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.
> 14.09.2026 அன்று காலை 7 மணி முதல் விநாயகருக்கு லட்சார்ச்சனை நடைபெறும்
>
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவி அளித்து விழாவினை சிறப்பாக நடத்திக் கொடுத்து விநாயகர் பெருமான் அருளைப் பெறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நிகழ்ச்சி விவர அட்டவணை
| தேதி | நேரம் | நிகழ்ச்சி விவரம் |
|---|---|---|
| 14.09.2026
திங்கள் | 4:00 - 5:00 PM | மகாபெரியவாளும் மகாகணபதியும் - ஸ்ரீ கணேஷ் சர்மா |
| | 5:00 - 6:30 PM | சூர்யா இசைப் பள்ளி மாணவர்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி குழு : Dr. பிரேமா குருமூர்த்தி (புகழ் பெரும் நடிகர் பாடகர் TR மகாலிங்கம் அவர்களின் பேத்தி) |
| | 6:30 - 7:00 PM | செல்வி. S.சம்ரிதி - நடன நிகழ்ச்சி |
| | 7:00 - 9:00 PM | 'கந்தர்வ கான ஜோதி' 'கலைமாமணி' அமரர் வீரமணி சுவாமியின் இசை வாரிசு 'கந்தர்வ கான இளவல்', 'தெய்வீக குரலோன்' வீரமணிக்கண்ணன், 'கலைமாமணி' டாக்டர் மணீபாரதி, 'இசைத்தென்றல்' சுபாஷ் வீரமணி குழுவினரின் மாபெரும் பக்தி இன்னிசை மழை |
| 15.09.2026
செவ்வாய் | 4:00 - 5:00 PM | கந்த சஷ்டி கவசம் பாராயணம் |
| | 5:00 - 6:00 PM | செல்வி P. ஹரிதா மற்றும் செல்வன் V.P. புத்ரிநாராயண் - இசை நிகழ்ச்சி |
| | 6:00 - 7:30 PM | ராதே கிருஷ்ணா பஜனை மண்டலியின் பக்தி இன்னிசை |
| | 7:30 - 9:00 PM | V.S. ரங்கராஜன் வீணை இசை நிகழ்ச்சி |
| 18.09.2026
வெள்ளி | 4:00 - 5:00 PM | லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் |
| | 5:00 - 6:00 PM | வேதபுரி கபாலிசீசுவரர் தேவார பாடசாலை குழந்தைகள் இசை நிகழ்ச்சி |
| | 6:00 - 7:30 PM | மகாகவியும் மகா கணபதியும் - இசைக்கவி ரமணன் |
| | 7:30 - 9:00 PM | காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வான், நாதரத்னா திருமருகல் Dr. S. தினேஷ்குமார் - வயலின் சோலோ
திரு. மணிகுடி S. சந்திரசேகர் - மிருதங்கம்
கலைநன்மணி ஜெ.ராமதாஸ் - கடம் |
| 19.09.2026
சனி | 9:00 - 11:00 AM | வந்தவாசி ஸ்ரீ கிரிதாரி பஜனை மண்டலி - நாம சங்கீர்த்தனம் |
| | | அஸ்வருடா ஆன்மீக இசை தென்றல் J. ராமகிருஷ்ணன் பாகவதர் மற்றும் குழுவினர் |
| | 4:00 - 5:00 PM | விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் |
| | 5:00 - 6:00 PM | செல்வி S. சௌம்யா - வாய்ப்பாட்டு |
| | 6:00 - 7:30 PM | ஸ்ரீமதி. R. விஜயலட்சுமி குழுவினரின் பக்தி இன்னிசை |
| | 7:30 - 9:30 PM | Pradhosh school of music - தாள வாத்திய நிகழ்ச்சி |
| 20.09.2026
ஞாயிறு | 9:00 - 11:00 AM | பாலாஜியின் ரசிக பிரியா பக்தி பாடல்கள் குழு |
| | 1:00 PM | ஸ்ரீ மகா கணபதியை வீதி ஊர்வலமாக பட்டினப்பாக்கம் கடலில் சேர்த்தல் |
நிர்வாகக் குழு:
* தலைவர்: K.S.ராஜா
* செயலாளர்: M.குமரேசன்
* பொருளாளர்: P.அசோக் செயின்
* Thirumylai Force: K.சீதாராமன், G.N.கோபாலகிருஷ்ணன், K.S.பிரகாஷ், B.சதீஷ்குமார் மற்றும் விழாக்குழுவினர்
Namasthe ji,
Inviting you for this year *Mylapore Chitrakulam Vinayagar Chaturthi Festival* planned for 7 days from 14th Sep to 20th Sep 2026.
Please come and get the blessings of lord Vinayaga.
Also, you can register for Laksharchanai by sharing Gothram, Name and Nakshatram of your family members to do sankalpam on Vinayagar Chathurthi day.
Please send in your contribution through GPay to make this event grand success.